நாதிபாளையம் ஊராட்சியில் நோய்த்தடுப்பு பணிகள் தீவிரம்: உணவுப்பொருட்கள், பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கிய அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட  நாதிபாளையம் ஊராட்சியில்,  கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.


இதன் தொடர்ச்சியாக தூய்மை பணியாளர்கள், சுகாதார பணியாளர்கள், மற்றும் அலுவலக பணியாளர்களுக்கு மருத்துவ காப்பீடு, அரிசி சிப்பம் மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் தொகுப்பினை வழங்கப்பட்டது.   மற்றும் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு  முக கவசம், கபசுர சூரணம்  வழங்கப்பட்டது. இப்பணிகளை தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் துவக்கி வைத்தார்.


மேலும் ஊராட்சி முழுவதும் அனைத்து பகுதிகளுக்கும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது . இதில் கோட்டாசியர் ஜெயராமன்,யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர் பஷீர், குணசேகர், ஊராட்சி மன்ற தலைவர் என்.எஸ்.கிருஷ்ணசாமி, ஊராட்சி செயலர் ஜெ.முருகானந்தம் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.