கொரோனாவ வீட்டுக்கு கூட்டிட்டு போகாதீங்கப்பா... ரோடு ரோமியோக்களுக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள் அறிவுரை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நான்கு வழி சாலை சந்திப்பில் 144 தடை உத்தரவு காரணமாக கொரானா  பாதிப்புகளை பொருட்படுத்தாமல்  இளைஞர்கள் ரோடுகளில் ரோமியோ போல  சுற்றித்திரிகிறார்கள். அவ்வாறு சுற்றித்திரியும் இளைஞர்களை பிடித்து விழிப்புணர்வு  அறிவுரைகளை பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழங்கினார்.


சாலையில் வெளியே சுற்றித்திரியும் யாருக்கு வேண்டுமானாலும் கொரோனா  பாதிப்பு இருக்கலாம் , மக்களே உஷாராக இருக்க வேண்டும்  என்றும் , இன்றைய முழு கொரோனா  பாதிப்பு  சூழ்நிலையை கருத்தில் கொண்டு யாரும் தயவு செய்து வெளியே வராமல் இருக்க வேண்டும் எனவும் பல்வேறு சூழ்நிலைகளை எடுத்துரைத்தார்.


மேலும்,  மக்கள்  நடமாடும் இடங்களிலும் தாங்கள் வாங்கும் கடைகள் மற்றும் உபகரணங்கள் என பல இடங்களில் உள்ள பொருட்கள் என பல்வேறு சூழ்நிலைகளிலும் மக்கள் புழங்கும் இடங்களில் கொரானா தொற்று பரவி இருக்கலாம் என்ற அச்சம் நிலவுவதாகவும், ஆகவே அனைவரும் வெளியே முடிந்தவரை வருவதை  தவிர்த்து அரசு அறிவித்த நாட்கள் வரை முழு கட்டுப்பாட்டில் ஊரடங்கை  கடைபிடிக்க வேண்டும் என்றும் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனியம்மாள்  உள்ளிட்ட போலீசார் விழிப்புணர்வை  ஏற்படுத்தி  வருகின்றனர்,