சமூக இடைவெளி - குடை பிடித்து பொருட்கள் வாங்கி சென்ற பொது மக்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

சாத்தான்குளம் அருகே பேய்க்குளம்   நியாய விலை கடையில் சமூக இடைவெளி ஏற்படும் வகையில் பொதுமக்கள் குடை பிடித்து பொருள்கள்  வாங்கி சென்றனர். 

 

கொரோனா  வைரஸ்  தொற்று பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் உள்ளதையடுத்து சமூக இடைவெளியை மக்கள் பின்பற்ற வேண்டும் என நாடு முழுவதும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் கேரள அரசு கரோனா தொற்றை தடுக்கும் வகையில் மக்கள் குடை பிடித்து வெளியே வர வேண்டும் எனவும், இதனால் தானாக சமூக இடைவெளி ஏற்படும் என மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதனை மக்கள் பின்பற்றி வருகின்றனர். 

 

இந்நிலையில் சாத்தான்குளம் அருகே உள்ள பேய்க்குளம்   நியாயவிலை  கடையில் சிகரம் அறக்கட்டளை நிர்வாகிகள் அறிவுறுத்தியதன் பேரில்  நியாயவிலை  கடைக்கு  வந்த மக்கள்  சமூக இடைவெளியை ஏற்படுத்தும் வகையில்  குடை பிடித்து வந்து பொருள்கள் வாங்கி சென்றனர்.

 

இதனையே அனைத்து மக்களும் பின்பற்றினால் சமூக இடைவெளி தானாக அமைவதுடன், நோய் தொற்று பரவுவதும்  தடுக்கப்படும் என சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.