திருப்பூரில் 1500 குடும்பங்களுக்கு அரிசி, காய்கறி தொகுப்பு; முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்
 

திருப்பூர் மாநகர் மாவட்ட கழகம் சார்பில், திருப்பூர் மாநகராட்சி 56 வது வார்டில், கே.வி.ஆர்., நகர், செல்லம் நகரில் 1500 குடும்பங்களுக்கு அரிசி மற்றும் காய்கறி தொகுப்புகளை திருப்பூர் மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.

 


 

முன்னாள் மண்டல தலைவர் வி.ராதாகிருஷ்ணன், நகர எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் சிட்டி பழனிசாமி, பகுதி செயலாளர் ஏ.எஸ்.கண்ணன், நீதிராஜன், ரத்தினகுமார், பழனிவேல், துரைசாமி, காதர்பேட்டை பாஷா,மேஸ்திரி சிவா, சண்முகம், பரமசிவம், சீனிவாசன், ஷாஜகான், பரமராஜன் உள்பட பலர் பங்கேற்றனர்.