கொரோனாவால் வாழ்வாதாரமே போச்சு...ரோட்டில் முடிவெட்டி போராட்டம்

தாம்பரம் அருகே ஊரடங்காள் பாதிக்கபட்ட 100க்கும் மேற்பட்ட சவர தொழிலாளர்கள்  சாலையிலேயே முடிதிருத்தம் செய்து நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.கொரோனா நோய் தொற்று தமிழகத்தில் அதிகரித்து வருவதால் 42வது நாளாக தொடர்ந்து ஊரடங்கு உத்திரவினை அறிவித்து வருகிறது இதனால் பல தொழில்கள் பாதிகபட்ட நிலையில் அதன் ஒரு பகுதியாக அழகு நிலயங்களிள நடத்தி வந்த தொழிலாளர்களும் வாழ்வாதாரத்தில் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது .இதனையடுத்து சென்னை தாம்பரம் அடுத்த பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்த 100க்கும்  மேற்பட்ட சவர தொழிலாளர்கள்   சாலையில் முடி திருத்தம் செய்து நூதன முறையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் தொடர் ஊரடங்காள் தங்களின் வாழ்வாதாரம் பெருதும் பாதிக்கபட்டுள்ளதாகவும்.தற்போது தமிழக அரசு சிறு கடைகளை திறக்க உத்திரவிட்டுள்ளது அது போல் அழகு நிலையங்களையும் திறக்க உத்திரவிட வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவித்து வரும் அனைத்து கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றி அழகு நிலையங்களை செயல்படுத்த தயாராக உள்ளதாகவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.