நத்தம் அருகே குளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பலி

திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே சமுத்திராபட்டியில் உள்ள உடையன் செட்டிகுளத்தில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். சமுத்திராபட்டியை சேர்ந்த விஜயன் மகன் 7ஆம் வகுப்பு படித்து வந்த புகழேந்தி வயது12. மதுரை மாவட்டம் அழகர்கோயில் அருகே மூனூரை சேர்ந்த மகேஷ் மகன்  5 வகுப்பு மாணவன் சக்திவேல் வயது10. விடுமுறைக்காக  சமுத்திரப்பட்டியிலுள்ள அவரது தாத்தா பொண்ணுச்சாமி வீட்டிற்கு வந்துள்ளார். இரு சிறுவர்களும் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளதால் பள்ளிகள் விடுமுறை விட்டதால் வீட்டில் இருந்துள்ளனர்.

 

இந்நிலையில் நேற்று அருகே உள்ள  உடையான்செட்டிகுளத்தில் குளிக்கச் சென்றனர். அப்போது இருவரும் தண்ணீரில் மூழ்கினர். காப்பாற்ற யாரும் இல்லாத காரணத்தினால் நீரிலேயே மூழ்கி இறந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், அவர்களது பெற்றோரும், ஊர்மக்களும் பல இடங்களில் இருவரையும் தேடி வந்த நிலையில் நேற்று இரவு குளத்திலிருந்து இருவரும் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர். இரண்டு சிறுவர்களின் உடலையும் உடற்கூறு ஆய்விற்கு நத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நத்தம் காவல் ஆய்வாளர் ராஜமுரளி இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் பள்ளி விடுமுறைக்காக தாத்தா வீட்டிற்கு வந்த பள்ளி சிறுவன்  குளத்தில் மூழ்கி உயிரிழந்தது அப்பகுதியில் பொதுமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.