அமமுக சார்பில் கோல்டன் நகரில் 20 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள்


திருப்பூர் மாநகர் வடக்கு மாவட்ட அமமுக, தொழிற்சங்கம் சார்பில், கோல்டன் நகரில் 20 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சம் மதிப்பில் அரிசி, பருப்பு, மளிகை பொருட்கள் தொகுப்பினை மாவட்ட தொழிற்சங்க செயலாளர் எஸ்.சூர்யாசெந்தில் வழங்கினார்.


இந்நிகழ்வில், மாவட்ட துணை செயலாளர் பாலதண்டாயுதபாணி, 32வது வட்ட கிளை கழக செயலாளர் ஆனந்தன், பேரவை செயலாளர் ராஜகோபால், ரைகானா பானு, பழக்கடை சித்திக், பிரபாகரன், செல்வம், தியாகராஜன், தேவராஜ், விஜயலட்சுமி, மணி, இந்திராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.