2000 குடும்பங்களுக்கு கொரானா தொற்று நிவாரண உதவி; முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்கள்

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

பல்லடம் தொகுதிக்கு உட்பட்ட பொங்கலூர் ஊராட்சி ஒன்றியம், தொங்குட்டிபாளையம் ஊராட்சியில் உள்ள 16 குக்கிராங்களை சேர்ந்த 2000 குடும்பங்களுக்கு கொரானா தொற்று நிவாரண உதவிகளை மாவட்ட செயலாரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன், எம்.எல்.ஏ., கரைப்புதூர் ஏ.நடராஜன் வழங்கினார்கள்.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

இந்நிகழ்ச்சியில் பொங்கலூர் ஒன்றிய செயலாளர் சிவாச்சலம், மாவட்ட கவுன்சிலர் பழனிசாமி, ஊராட்சி மன்றத்தலைவர் பிரியா நடராஜன், துணைத் தலைவர் பத்மா ஆனந்தன், மார்கெட்டிங் சொசைட்டி தலைவர் ஏ.சித்துராஜ், ஊராட்சி மன்ற செயலாளர் விவேகானந்தன், கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் குமார், மாவட்ட பேரவை துணைத்தலைவர் மோகன்ராஜ், ஊராட்சி மன்ற உறுப்பினர் நந்தகுமார், என்.எஸ்.கே.நகர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.