சென்னையில் இருந்து  கொழும்பு, தமாம் நகரங்களுக்கு சென்ற  சிறப்பு விமானத்தில் 354 பேர் பயணம்

சென்னையில் இருந்து  கொழும்பு, தமாம் ஆகிய நகரங்களுக்கு சென்ற  சிறப்பு விமானத்தில் 354 பேர் பயணம்



இந்தியாவிற்கு பல்வேறு நாடுகளில் இருந்து பயணிகள் சுற்றுலா விசாவில் வந்தனர். இவர்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதியில் சுற்றி வந்தனர்.


இந்நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக மத்திய அரசு கடந்த மாதம் 24ந் தேதி ஊரடங்கு உத்தரவை பிறப்பித்தது. இந்த ஊரடங்கு உத்தரவை வருகின்ற மே மாதம் 3ந் தேதி வரை மத்திய அரசு நீடித்து உள்ளது. 


மேலும் பன்னாட்டு மற்றும் உள்நாட்டு  விமானங்களுக்கும் தடை விதிக்கப்பட்டது.


இதனால் இந்தியாவிற்கு சுற்றுலா வந்த பயணிகள் மீண்டும் தங்கள் நாட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர்.


இந்த நிலையில் கடந்த  சில தினங்களாக சென்னையில் இருந்து அமெரிக்கா, பிரான்ஸ், மலேசியா, ஜப்பான், சிங்கப்பூர், பூட்டான் உள்பட பல நாட்டிற்கு  சுற்றுலா வந்த பயணிகளை திரும்பி அழைத்து செல்ல சிறப்பு விமானங்கள் இயக்கப்பட்டது. 


தமிழகத்தில் மேலும் தங்கி உள்ள வெளிநாட்டு நாட்டு பயணிகளை சிறப்பு விமானங்கள் முலம் அழைத்து செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது. 


இதையடுத்து தமிழகத்தில் பல பகுதிகளில் தங்கியிருந்த இலங்கையை சேர்ந்தவர்கள்  சென்னையில் இருந்து கொழும்பிற்கு சென்ற சிறப்பு விமானத்தில் 323 பேர் புறப்பட்டு சென்றனர்.


அதுப்போல் மஸ்கட்டிற்கு சென்ற விமானத்தில் 31 பேர் பயணம் செய்தனர்.


Previous Post Next Post