திருநெல்வேலியில் கொரோனா வார்டில் பணிபுரிந்த 40 செவிலியர்களுக்கு பழவகைகள் தொகுப்பு; தச்சை கணேசராஜா வழங்கினார்


 

திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பணிபுரிந்த 40 செவிலியர்களுக்கு தன்னலமற்ற சேவையை பாராட்டும் விதமாக வாழைப்பழம், மாம்பழம், ஆப்பிள், ஆரஞ்சு மாதுளை, கொய்யா மற்றும் நெல்லிக்கனி ஆகிய பழங்கள் அடங்கிய  தொகுப்பினை நெல்லை மாநகர் மாவட்ட கழக அதிமுக செயலாளரும் திருநெல்வேலி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் பெருந்தலைவருமான தச்சை கணேசராஜா வழங்கினார்.