கோபியில் மக்கள் நீதி மய்யம் சார்பில் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்


 

மக்கள் நீதி மய்யம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் மதுக்கடைகளை மே 17ந்தேதி மூட வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டதை தொடர்ந்து ஈரோடு வடகிழக்கு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி மக்கள் நீதி மய்யத்தினர் மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.

 

இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி.சி. சிவக்குமார், கோபி ஒன்றிய செயலாளர் என்.கே. பிரகாஷ், மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ், கோபி சட்டமன்ற தொகுதி ஒருங் கிணைப்பு என்.கே. சக்தி, சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா.முத்துக்குமார்  மற்றும் பலர் கலந்து கொண்டனர்.