முதல் அக்ரஹாரம் ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி ஏகாதசி முன்னிட்டு சிறப்பு பூஜை 
 

சேலம் மாவட்டம் முதல் அக்ரஹாரம் அருகே அமைந்துள்ள ஸ்ரீ வீர ஆஞ்சநேயர் திருக்கோவில் இன்று வைகாசி மாதம் ஏகாதசி முன்னிட்டு  கொரோனோ நோய் தடுப்பில் இருந்து உலக மக்களை காத்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்ப வேண்டி விரைவில் அனைத்து ஆலயங்களும் திறந்து பக்தர்களுக்கு சிறப்பாக தரிசனம் கிடைக்க  வேண்டுமென சிறப்பாக ஸ்ரீ வீர ஆஞ்சநேயருக்கு சந்தனகாப்பு சாத்தப்பட்டு கோபி சுரேஷ் அர்ச்சகர் சிறப்பாக அலங்காரம் செய்திருந்தார். 

 


 

பத்மநாபன் அர்ச்சகர் துளசி தளத்தில் சிறப்பாக அர்ச்சனை செய்யப்பட்டு பஞ்ச கற்பூர ஆரத்தி மற்றும் கற்பூர ஆரத்தி காட்டப்பட்டது. ஊரடங்கு உத்தரவு  மற்றும் சமூக இடைவெளி பின்பற்ற வேண்டுமென முக கவசம் அணிந்து  மிகவும் குறைவான பக்தர்களுடன் பூஜை சிறப்பாக நடைபெற்றது. கலந்து கொண்ட பக்தர்களுக்கு தீர்த்த பிரசாதம் மற்றும் சடாரி மரியாதை வழங்கப்பட்டது.