ஊரடங்கு உத்தரவால் இறந்த சிசுவின் உடலை அடக்கம் செய்யமுடியாமல் சிக்கலில் தவித்த குடும்பத்தினர்: விரைந்து நடவடிக்கை எடுத்த இன்பதுரை எம்.எல்.ஏ

நெல்லை மாவட்டம்  இராதாபுரம் தொகுதி     திசையன்விளை தாலுகா கஸ்தூரிரெங்கபுரத்தை சேர்ந்த கதிரவன் இசக்கியம்மாள் தம்பதியினர்.


இவர்களுக்கு  ஏற்னவே 2 வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. நிறைமாத கர்பிணியான இசக்கியம்மாள்  நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் மகேப்பேறுக்காக சேர்க்கப்பட்டார். இருதினங்களுக்கு முன்  அவருக்கு மருத்துவமனையில் பெண் குழந்தை பிறந்தது. மகப்பேறுக்குப்பின்  இச்கியம்மாளுக்கு உடனடியாக பெண்களுக்கான கருத்தடை அறுவை சிகிச்சையும் செய்யப்பட்டது.



இந்நிலையில்  இசக்கியம்மாளுக்கு பிறந்த குழந்தை நேற்று நண்பகல் 11மணியளவில்  இறந்தது. இச்சம்பவம் இசக்கியம்மாளின் குடும்பத்தினரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.


 இறந்த சிசுவின் உடலை இசக்கியம்மாள் குடும்பத்தினர் அடக்கம் செய்ய கேட்டபோது 144 தடை உத்தரவை சுட்டி காட்டிய மருத்துவமனை நிர்வாகம் உடலை ஒப்படைக்க மறுத்ததுடன், இறந்த சிசுவின் உடலை உடனடியாக பிணவறையில் வைக்கவும் உத்தரவிட்டுள்ளது.


 ஊரடங்கு உத்தரவால் இசக்கியம்மாளின் கணவர் கதிரவன் தனது சொந்த ஊரான கஸ்தூரிரங்கபுரத்திலிருந்து நாகர்கோவில் மருத்துவமனைக்கு உடனடியாக செல்ல முடியாத சூழ்நிலையில் தவித்து வந்தார்.


 மருத்துவமனையில் இருந்த இசக்கியம்மாளுக்கு துணையாக ஓரு வயதான மூதாட்டி ஒருவர் மட்டும் உடனிருந்து கவனித்து வந்துள்ளார். இதனால் இறந்த சிசுவின்  உடலை மீட்டு வந்து அடக்கம் செய்யமுடியாமல் குடும்பத்தினர் தவித்து வந்தனர்.  


இந்த சோக சம்பவம் அப்பகுதியில் காட்டுத் தீ போல பரவியது. இந்த விவகாரம் இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்ப துரையின் கவனத்திற்கு தெரியவந்தது. 


 ஆசாரிபள்ளம் மருத்துவமனை அதிகாரிகளிடம் இன்பதுரை எம்எல்ஏ தொலைபேசி மூலம் உடனே தொடர்பு கொண்டு பேசினார்.


144 தடை உத்தரவு இருப்பதால் இறந்த சிசுவின் உடலை மாவட்ட ஆட்சித்தலைவர் அனுமதி இன்றி பெற்றோர் வசம் ஒப்படைப்பதில் சிக்கல் இருப்பதாக அரசு மருத்துவமனை அதிகாரிகள் தெரிவித்தனர்.



இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரிடம் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட எம்.எல்.ஏ இன்பதுரை இறந்த சிசுவின் உடலை ஒப்படைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொண்டார்.


இதை தொடர்ந்து கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவுப்படி இறந்த சிசுவின் உடலை உடனடியாக ஆம்புலன்ஸ் வாகனம் மூலம்  கொண்டுவரப்பட்டு நெல்லை மாவட்டம் கஸ்தூரிரெங்கபுரத்திலுள்ள கதிரவன் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.


குழந்தையை இழந்து கடந்த 24 மணிநேரமாக கண்ணீரில் தவித்த பெற்றோரின் வலிகளை உணர்ந்து  அந்த சிசுவின் உடலை விரைந்து நடவடிக்கை எடுத்து மீட்டு கொடுத்த இராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரைக்கு கதிரவன் குடுமபத்தினர் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தனர்


Previous Post Next Post