வேப்பூர் அருகே மினி லாரியும், காரும் மோதி விபத்து; ஒருவர் பலி, இருவர் காயம்
வேப்பூர் அருகே மினி லாரி, கார் நேருக்கு நேர் மோதியதில் ஒருவர் இறந்துவிட இரண்டு பேர் காயமடைந்தனர்.

 


 

சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகிலுள்ள அம்மாபாளையம்,எம்ஜிஆர் நகரை சேர்ந்த ஜோதி மணிகண்டன்  (வயது- 46), அவரது மகன் பொன்ஜீவன் ஆகியோர் டிஎன் 30 இசட் 8075 என்ற ஆம்னி காரில் வேப்பூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர்  , காரை அதே பகுதியை சேர்ந்த குருசாமி மகன் பழனிசாமி (வயது -48) என்பவர் ஓட்டி வந்தார்

 

இவர்களது வாகனம் கடலூர் மாவட்டம்,  வேப்பூர் அருகிலுள்ள விளம்பாவூர் என்ற இடத்தில் வந்த போது  எதிரில் காய்கறி ஏற்றிகொண்டு  வந்த மகேந்திரா சரக்கு  வாகனம் எதிர்பாராதவிதமாக ஆம்னி காரில் மோதியது.

 


 

இதில் ஆம்னி காரை ஓட்டி வந்த பழனிசாமி சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார், காரில் அமர்ந்திருந்த ஜோதி மணிகண்டன்,  அவரது மகன் பொன்ஜீவன் இருவரும் படுகாயங்களுடன் பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கபட்டனர்  

 

இது குறித்து தகவலறிந்த வேப்பூர் இன்ஸ்பெக்டர் கவிதா, எஸ்ஐ,சக்திகணேஷ் ஆகியோர்  சம்பவ இடத்திற்கு சென்று வழக்கு பதிவு செய்து  இறந்த பழனிசாமியின் உடலை  கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்திய மகேந்திர சரக்கு வாகனத்தின் ஓட்டுனரான ஆத்தூர் அருகிலுள்ள தென்னங்குடி பாளையத்தை சேர்ந்த பழனிவேல் மகன் திலிப்குமார் (வயது 21) என்பவர் மீது வழக்கு பதிவு செய்தனர்