கொளப்பலூர் பேருராட்சியில் ஆதரவற்றோர், முதியோர்களுக்கு தினந்தோறும் சைவம் மற்றும் அசைவ உணவு


உலகையே அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் நோய்  தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாகவும், ஊரடங்கின் போது வறுமையால் வாடும் ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளைம் சட்டமன்ற தொகுதிகுட்பட்ட கொளப்பலூர் பேருராட்சியில் ஆதரவற்றோர், முதியோர்களுக்கும், வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் தூய்மை பணியாளர்களுக்கும் மாவட்ட ஆட்சி தலைவர் சி.கதிரவன் உத்திரவின் படி, தமிழக பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் அறிவுறுத்தலின்படியும், ஈரோடு மாவட்ட பேருராட்சிகளின் உதவி இயக்குநர் ஆலோசனை படி செயல் அலுவலர் சு.சிவக்குமார் தலைமையில் தினந்தோறும் சைவம் மற்றும் அசைவ உணவுகளை பேரூராட்சி அலுவலகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.