பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடி... போடி பகுதியில் பரபரப்பு

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தொகுதியான போடியில் ரெங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே பாரதிய ஜனதா கட்சியின் கொடி கம்பத்தில் இந்திய தேசிய கொடியை ஏற்றிய சம்பவம் போடி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 


 

தேனி மாவட்டம் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் தொகுதியான போடியில் ரங்கநாதபுரம் பேருந்து நிறுத்தம் அருகே உள்ள பாரதிய ஜனதா கட்சிக்கு சொந்தமான கொடிக்கம்பத்தில் இந்திய தேசிய மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து பரபரப்பை ஏற்படுத்திய பாரதிய ஜனதா கட்சியினர்.

 

ரங்கநாதபுரத்தில் மத்திய பகுதியான பேருந்து நிறுத்தம் அருகே தேசிய கொடியை அவமதித்து தனிப்பட்ட கட்சியின் கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட்டதைக் கண்ட அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மிக மனவேதனை அடைந்தனர்.

 

மூவர்ண தேசியக் கொடியின் முக்கியத்துவம் அறியாமல் பொது இடத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த கொடிக் கம்பத்தில் தேசியக் கொடியை பறக்க விட்ட நிகழ்வு இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிமுறைகளை மீறிய வகையிலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் விதிகளை அவமதிக்கும் வகையிலும் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் தவ்ரிவிக்கின்றனர்.

 

கொடியை ஏற்றியவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என போடி பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்களும் பொதுமக்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். அரசியல் கட்சியை சேர்ந்த நபர்கள் தேசியக் கொடியை அவமதிக்கும் நிகழ்வு தமிழகத்தில் தற்போது துணை முதல்வரின் தொகுதியான போடியில்  தற்போது அரங்கேறி உள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.