26 லட்சம் மதிப்பிலான மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிக்கு அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு  துவக்கி வைத்தார்


ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாளபாளையம், குள்ளம்பாளையம் ஊராட்சிகளில் 14வது நிதிக்குழு திட்டத்தின் கீழ்  26 லட்சம் மதிப்பிலான மேல்நிலைத் தொட்டி அமைக்கும் பணிக்கு  தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பூமி பூஜையிட்டு  துவக்கி வைத்தார்.


முன்னதாக குடிசை மாற்று வாரியத்தின் மூலம் கட்ட பட்ட வீடுகளை அமைச்சர் பார்வையிட்டார். இதில்கோட்டாட்சியர் ஜெயராமன், இளநிலை பொறியாளர் சிலம்பரசன், ஒன்றிய குழு தலைவர் மௌதீஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பஷீர், ராஜேந்திரன், கவுன்சிலர் திலகவதி வாசுதேவன், ஊராட்சி மன்ற தலைவர் சத்தியபாமாவேலுமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.