திருப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு 50 ஏழை, எளிய குடும்பங்களுக்கு ரூ 20 ஆயிரம் மதிப்பில் தலா 5 கிலோ அரிசி மற்றும் நிவாரண பொருட்கள்

திருப்பூரில் முன்னாள் முதல்வர் கருணாநிதி நினைவு நாளை முன்னிட்டு 50 ஏழை,எளிய குடும்பங்களுக்கு தலா 5 கிலோ அரிசி 20 ஆயிரம் மதிப்பிலான நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டது.

 


 

திருப்பூர் வடக்கு மாவட்ட தி.மு.க. 55-வது வட்டக்கழகம்  சார்பில் பெரிச்சிபாளையம் நால்ரோடு அருகே உள்ள கட்சி அலுவலகம் முன்பு முன்னாள் முதல்வர் கருணாநிதியின்  இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி அவரின் திரு உருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு 55-வது வார்டு செயலாளர்  ஆதவன் முருகேசன், கருவம்பாளையம் பகுதி கழக அவைத்தலைவர் தம்பி.குமாரசாமி ஆகியோர் தலைமை தங்கினார்கள்.

 


 

தொடர்ந்து கொரோனா காலத்திலும் அயராது பணியாற்றும் துப்புரவு பணியாளர்களுக்கு மரியாதை செலுத்திவிதமாக சுமார் 50 ஏழை எளிய குடும்பம்களுக்கு தலா 5 கிலோ அரிசி

மற்றும் நிவாரண உணவு பொருட்கள் ரூ 20 ஆயிரம் மதிப்பில் வழங்கப்பட்டது.

 

இதில் வட்டக்கழக அவைத்தலைவர் பால்காரர் ராஜேந்திரன், வார்டு பிரிதிநிதிகள் தமிழ்செல்வன், சியாமளா ராஜேந்திரன், மாநகர மகளிரணி துணை அமைப்பாளர் மல்லிகா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பொறுப்புப்குழு உறுப்பினர் பொன்.ராசுக்குட்டி, ராமமூர்த்தி, ஈஸ்வரன், சங்கர்,சிவா, சாந்தி, மீனா, மற்றும் இளைஞரணி ரத்தினசாமி, ஜீவா, சஞ்சய், இருளப்பன், சின்னசாமி, கணேசன், முத்துசாமி, ரங்கசாமி, உள்ளிட்ட கட்சியின் நிர்வாகிகள், முத்த முன்னோடிகள் மற்றும் அப்பகுதி பொது மக்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளி கடைபிடித்து கலந்து கொண்டனர்.