ஸ்ரீபெரும்புதூர் பாஜக சார்பில் 74 வது சுதந்திர தின விழாஸ்ரீபெரும்புதூர் பாஜக சார்பில் 74 வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு அழைப்பாளராக பாஜக மாநில SC அணி பொருளாளர் தொழிலதிபர், Pபி.பி.ஜி.டி. சங்கர் கலந்து கொண்டு தேசிய கொடியேற்றி சுதந்திர போராட்ட தியாகிகளை நினைவு கூர்ந்தார்.

 

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் பேருந்து நிலையம் அருகில் ஸ்ரீபெரும்புதூர் நகர பாஜக சார்பில் 74 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு தேசிய கொடியை ஏற்றி கொண்டாடப்பட்டது.

 

இந்நிகழ்ச்சியை ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் ஜெகதீசன் தலைமை ஏற்று நடத்தினார். காஞ்சி மாவட்ட துணைத்தலைவர் ஓம்சக்தி எம்.செல்வமணி மற்றும் காஞ்சி மாவட்ட செயலாளர் ஹரிகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர்.

 

மாநில எஸ்.சி அணி பொருளாளர் தொழிலதிபர், பி.பி.ஜி.டி.சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தேசிய கொடியை ஏற்றி, சுதந்திர போராட்டத்தில் கலந்து கொண்டு நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தலைவர்களை நினைவு கூர்ந்தார்.

 

மேலும் சமூக ஊடக மாவட்ட பொறுப்பாளர் ஆர்.கார்த்திக், ஸ்ரீபெரும்புதூர் கிழக்கு ஒன்றிய துணைத்தலைவர்  ஏ.ஜி மணிமாறன், நகர எஸ்.சி அணித்தலைவர்  பி.ஜெயக்குமார் மற்றும்   பாஜகவினர், பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் முகக் கவசங்கள் அணிந்து, சமூக இடைவெளி யோடு கலந்து  கொண்டனர்.


 

 
 

Attachments area