விருதுநகர் மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில்  வரவேற்பு

விருதுநகர் மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் பால்வளத் துறை அமைச்சர் கே. டி. ராஜேந்திரபாலாஜி தலைமையில்  வரவேற்புவிருதுநகர்  மாவட்ட எல்லையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு விருதுநகர் மாவட்ட கழக பொறுப்பாளர் தமிழக பால்வளத் துறை அமைச்சர் கே. டி ராஜேந்திரபாலாஜி அவர்கள் தலைமையில்  வரவேற்பு கொடுக்கப்பட்டது.


தமிழகம் முழுவதிலும் கொரோனா தடுப்பு  நடவடிக்கையில் தமிழக அரசு தீவிரமாக  ஈடுபட்டு வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை ஆய்வு பணிகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் நேரில் சென்று ஆய்வு செய்து வருகின்றார்


தென் மாவட்டங்களில் திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கை பணிகளை இரண்டு நாட்களாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் ஆய்வு செய்து வருகிறார் .


இன்று மதுரை நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு விருதுநகர் வழியாக திருநெல்வேலிக்கு தமிழக முதல்வர்  சென்றார் தமிழக முதல்வருக்கு விருதுநகர் மாவட்ட எல்லையில் மாவட்ட கழக பொறுப்பாளர் பால்வளத்துறை அமைச்சர் கே. டி .ராஜேந்திர பாலாஜி  பூங்கொத்து  கொடுத்து  வரவேற்பு கொடுத்தார்.


தொடர்ந்து மாவட்ட கலெக்டர் கண்ணன், மாவட்ட எஸ்பி பெருமாள், ஸ்ரீவில்லிபுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் சந்திரபிரபா முத்தையா, சிவகாசி சப்-கலெக்டர் தினேஷ்குமார் , மாவட்ட வருவாய் ஆய்வாளர் சுரேஷ், நேதாஜி சுபாஷ் சேனை நிறுவனர் வழக்கறிஞர் டாக்டர் மகாராஜன், மாவட்ட ஊராட்சி சேர்மன் வசந்தி மான்ராஜ் வைஸ் சேர்மன் சுபாஷினி, திருச்சுழி  ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் பஞ்சவர்ணம்  வத்ராப் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர்  சிந்து முருகன் மாவட்ட மருத்துவ அணிச் செயலாளர் விஜய் ஆனந்த் மாவட்ட சிறுபான்மையினர் அணி பிரிவு செயலாளர்  சையதுசுல்தான் இப்ராஹீம் மாவட்ட இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆரோக்கியம் சிவகாசி ஒன்றிய கழகச் செயலாளர்கள் புதுப்பட்டி கருப்பசாமி, பலராம், நரிக்குடி திருத்தங்கல் நகரக் கழகச் செயலாளர் பொன்சக்திவேல் ஸ்ரீவில்லிபுத்தூர் ஒன்றியக் கழகச் செயலாளர்கள் மயில்சாமி முத்தையா அருப்புக்கோட்டை நகரக் கழகச் செயலாளர்  சக்திவேல் மதுரை ஏர்போர்ட் அத்தாரிட்டி கமிட்டி உறுப்பினர் எஸ். எஸ் .கதிரவன் மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் மச்சேஷ்வரன் மாநில தொழிற்சங்க தொழிலாளர் வீரேசன் சிவகாசி இளைஞரணி ஒன்றிய செயலாளர் சங்கர் விருதுநகர் நகர அம்மா பேரவை செயலாளர் கணேஷ் குரு  சிவகாசி நகர அம்மா பேரவை செயலாளர் கருப்பசாமிபாண்டியன் சிவகாசி நகர இளைஞரணி செயலாளர் கே. டி. ஆர். கார்த்திக் மற்றும் கட்சி நிர்வாகிகள் அரசு அதிகாரிகள் தமிழக முதல்வருக்கு சால்வை கொடுத்து வரவேற்றனர்.