மங்களூர் ஒன்றிய திமுக இளைஞர் அணிசார்பில் கலைஞர் நினைவுநாள் அனுசரிப்பு

 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி வட்டம் மா பொடையூர் ஊராட்சியில் மறைந்த முன்னால் முதலமைச்சர் கலைஞர்  கருணாநிதியின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளையொட்டி  மங்களூர் ஒன்றிய திமுக இளைஞர் அணி அமைப்பாளரும் கவுண்சிலருமான கே.என்.டி சுகுணாசங்கர் கலைஞர் திருவுறுவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செய்தார்.

 

பின்னர் பொடையூர்,ஆலம்பாடி,கல்லூர் ஆகிய ஊராட்சி தூய்மை காவலர்கள் 50 பேருக்கு அரிசி,காய்கறி,மளிகைபொருட்கள்,மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கினார்.

 

இந்நிகழ்வில் கிளைச்செயலாளர் அருள்சாமி,மூத்த முன்னோடி தியாகி முனியன், முன்னால்  ஒன்றிய பாசரை இளைஞர்அணி செயலாளர் இளங்கோவன்,முன்னால் கிளைசெயலாளர் வாலர்,வார்டு  உறுப்பினர் சின்னதுரை, முன்னால் ஊராட்சிமன்ற தலைவர் தனவேல், தொழிலதிபர் வர்த்தகர் அணி ஏவிஆர் பழனிவேல், தொழிலதிபர் எஸ்விஎஸ் சூர்யா மற்றும் கழக முன்னோடிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.