ஊரடங்கில் கல்லூரிக்கு சென்று வந்த சிறுமி 6 மாதம் கர்ப்பம்.. வேலூர் பரபரப்பு

வேலூர் அருகே பாலிடெக்னிக் மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் கல்லூரி பணியாளர் ஒருவர் கைது செய்யப்பட்டுளார்.

 


 

வேலூர் மாவட்டம் காட்பாடியைச் சேர்ந்த 16 வயதான சிறுமி அப்பகுதியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். தமிழகத்தில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட மார்ச் மாத தொடக்கத்தில் சிறுமியின் வீட்டிற்கு போன் கால் ஒன்று வந்துள்ளது.

 

அந்த போன் காலில், மாணவ மாணவிகள் அனைவரும் தங்களுடைய ரெகார்ட் நோட்டை சமர்ப்பிக்க வருகின்றனர், ஆகையால் உங்கள் மகளும் வரவேண்டும் என கூறியுள்ளனர். அதன் பேரில் சிறுமியும் ரெகார்ட் நோட்டை கையில் எடுத்துக்கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். அங்கு அவர் மீது யாரோ ஒருவர் மயக்க ஸ்பிரேவை அடித்துள்ளனர். அதன் பின்பு மாணவி சுயநினைவை இழந்துள்ளார். பின்னர் மயக்கம் தெளிந்து வீட்டிற்கு வந்த சிறுமியின் வயிறு 6 மாதம் கழித்து லேசாக வீங்கியுள்ளது. வீட்டில் இருப்பவர்கள் அதை கவனித்த நிலையில் சிறுமியிடம் அதுகுறித்து கேட்டுள்ளனர்.

ஆனால், அத்தேழாம் ஒன்றுமில்லை என்று சிறுமி மழுப்பியுள்ளார். இந்நிலையில், சரி வா மருத்துவமனைக்கு செல்லலாம் என்று வீட்டில் இருப்பவர்கள் சிறுமியை அழைத்துக்கொண்டு வடுகந்தாங்கலில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்துக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமி கர்ப்பமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிந்துள்ளனர். சிறுமியின் கழுத்தில் தாலியும் இல்லாததால், சந்தேகமடைந்த மருத்துவர்கள் அவரிடம் விசாரித்தனர். சிறுமியின் மழுப்பலான பதில்களை அடுத்து, பெண்கள் மற்றும் சிறுமிகளின் சேவை மையத்துக்கு மருத்துவர்கள் தகவல் கூறியுள்ளனர்.

 

அவர்கள் வந்து விசாரித்த போது, சம்பவம் நடந்த அன்று கல்லூரியில் வேலை பார்க்கும்

 

பிரதாப் என்பவர் தன்னை மயக்கமடைய செய்துவிட்டு பலாத்காரம் செய்தார் என்றும், அதை வெளியில் சொன்னால் கொலை செய்துவிடுவேன் என்றும் மிரட்டியதாக சிறுமி அழுதுகொண்டே தெரிவித்தார். அதையடுத்து, பிரதாப் மீது காட்பாடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அதன் பேரில் போலீசார் பிரதாப்பை கைது செய்து விசாரித்து வருகின்றனர். சிறுமிக்கு மருத்துவ பரிசோதைகளை மேற்கொள்ள அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கிடைத்த தகவலின்படி, போலீசின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதாப், நான்தான் சிறுமியின் படிப்பு செலவிற்கு உதவி வருகிறேன். நான் அவரை எதுவும் செய்யவில்லை என்று கூறுகிறார். இதற்கிடையில், கல்லூரியில் நான் கண் விழித்து பார்க்கும்போது பிரதாப் தான் உடன் இருந்தார். அவர்தான் என்னை மிரட்டினார் என கூறுகிறார். மருத்துவ பரிசோதனை முடிந்த பின்னரே யார் குற்றவாளி என்று தெரியவரும்.