ஆவட்டியில் சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன்  75வது நினைவேந்தல்


 

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ஆவட்டி கூட்டு சாலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நீதிப் போராளி இரட்டைமலை சீனிவாசன்  75 வது நினைவேந்தல் நிகழ்ச்சி  கடலூர் மேற்கு மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் விஜயகுமார்  தலைமையில் நடைபெற்றது.

 

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக கடலூர் மண்டல செயலாளர் திருமாறன், முன்னாள் மாவட்ட செயலாளர் தயார் தமிழன்பன், மாவட்ட வணிகர் அணி அமைப்பாளர் பாசார் சுந்தர்,திராவிடர் கழகம் ராஜா,அறிவு விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகியோர் கலந்துகொண்டு திரு உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தனர்.

 

  இதில் கலந்து கொண்ட அனைவரும் புதிய கல்விக் கொள்கை நீட் தேர்வுக்கு எதிராக அச்சகங்கள் தாங்கிய பதாகைகள் ஏந்திகொண்டு

 நீட் தேர்வுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். 

 

இதில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஏராளமானோர் கலந்து கொண்டனர் பின்னர் இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் 75 ஆவது நினைவு நாளை ஒட்டி மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இதில் குமார்,வழக்கறிஞர் பாலு, ஐயப்பன்,சங்கர்,தீனா டெய்லர் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.