தயாரிப்பாளர்களை நோஞ்சான் என கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் -தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள்


தயாரிப்பாளர்களை நோஞ்சான் என கூறி அவமதித்த பாரதிராஜா மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லை என்றால் அவர் வீட்டின் முன்பு கூடி கண்டனம் தெரிவிப்போம் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்கள் பேட்டி.


 


 

ஒ.டி.டி யில் படங்கள் வெளியிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு எனவும் தெரிவித்தனர்.

 

தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க நமக்கு நாமே அணியினர் திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்தனர். அந்த அணி உறுப்பினர் திருப்பூர் செல்வராஜ் உள்ளிட்டோர் பேசுகையில், பாரதிராஜா நோஞ்சான் என தெரிவித்த கருத்துக்கு மன்னிப்பு கோர வேண்டும் எனவும் மேலும் இதற்கான விளக்கம் என டிவிட்டர் பதிவில் அடிபணிந்து, ஒடுக்கப்பட்டு செயலற்ற நிலையில் திரியும் அல்ல நிலை கண்டு கோபத்தில் வெளி வந்த வார்த்தைகள் என மேலும் தரக்குறைவாக பேசி உள்ளதாகவும் இதற்கு பாரதிராஜா உடனடியாக மன்னிப்பு கோர வேண்டும் எனவும் இல்லை என்றால் அவரது வீட்டின் முன்பு கூடி கண்டனத்தை தெரிவிப்போம் என தெரிவித்தனர்.

 

மேலும் சங்கம் ஒரு தலை பட்சமாக நடப்பதாகவும், தயாரிப்பாளர்களுக்கு நன்மைகள் கிடைக்க வில்லை எனவும் தெரிவித்தனர். ஒ.டி.டி யில் படங்கள் திரையிடுவது தயாரிப்பாளர்கள் முடிவு எங்கு வருமானம் வருகிறதோ அதை தான் நாடி செல்வோம் என பேட்டி.

 

 


 

 

  .