மாற்றுத்திறனாளி மற்றும் ஏழை பெண்களுக்கு சமூக நலத்துறையின் மூலம் இலவச தையல் இயந்திரம் - மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் தகவல்.!


தூத்துக்குடி மாவட்ட சமூகநலத்துறையின் மூலம் விதவை,கணவனால் கைவிடப்பட்டவர், ஆதவரவற்றோர், மாற்றுத்திறனாளி பெண்கள் மற்றும் ஏழைப் பெண்களுக்கு மின்மோட்டார் பொருத்தப்பட்ட இலவசதையல் இயந்திரம் வழங்குவதற்கு தகுதி வாய்ந்த பயனாளிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட  ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.

விண்ணப்பத்துடன் இணைக்கப்பட வேண்டிய சான்றுகள்:

1. வருமானச்சான்று ரூ 72,000/- க்குள்  (வட்டாட்சியரிடம் பெறவேண்டும்). 

2. இருப்பிடச் சான்று (வட்டாட்சியரிடம் பெறவேண்டும் அல்லதுரேசன்கார்டு). 

3. தையல் பயிற்சிசான்று (பதிவுசெய்யப்பட்டதையல் நிறுவனத்திடமிருந்துபெறப்பட்டது) (6மாத காலபயிற்சி). 

4. வயதுசான்று (20 முதல் 40 வயது வரை) அல்லது கல்விச்சான்று அல்லது பிறப்புச்சான்று. 

5. ஜாதிச்சான்று. 

6. கடவுச்சீட்டு அளவுமனுதாரரின் கலர் புகைப்படம்-2, 

7. விதவை,கணவனால் கைவிடப்பட்டவர்,ஆதரவற்றமகளிர் மற்றும் மாற்றுத்திறனாளி பெண் சான்று நகல். 

8. ஆதார் அடையாளஅட்டை.

மேற்காணும் ஆவணங்களுடன் விண்ணப்பங்களை தூத்துக்குடி மாவட்ட சமூகநல அலுவலகத்தில் 16.07.2021 - க்குள் சமர்ப்பிக்குமாறு இதன் மூலம் தெரிவிக்கப்படுகிறது. 

தொடர்புகொள்ள வேண்டிய முகவரி

 மாவட்ட சமூகநல அலுவலர், மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட ஆட்சியர் வளாகம், கோரம்பள்ளம், தூத்துக்குடி-628101

Previous Post Next Post