வருமான வரி கணக்கு தாக்கல்- டிசம்பர் 31, 2021 வரை அவகாசம் நீட்டிப்பு


வருமான வரி கணக்கு 2021 - 22 ஆண்டுக்கான ஐ.டி., ரிட்டனுக்கான அவகாசம் டிசம்பர் 31, 2021 வரை நீட்டிக்கப்படுகிறது. கடந்த ஜூன் மாதம் வருமான வரிக்கான புதிய இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது.

இன்போசிஸ் நிறுவனத்திடம் இப்பணிகள் ஒப்படைக்கப்பட்டிருந்தன. புதிய இணையதளம் மக்கள் பயன்பாட்டுக்கு வந்தவுடன் லட்சக்கணக்கான பயனர்களால் அதில் உள்நுழைய முடியவில்லை. மேலும் வருமான வரித் தாக்கலில் ஏராளமான சிக்கல்களை பொதுமக்கள் சந்தித்தனர்.

அதனையடுத்து வருமான வரித் தாக்கலுக்கான கெடு தேதி செப்டம்பர் மாதம் இறுதி வரை நீட்டிக்கப்பட்டது.தற்போது இது டிசம்பர் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.