தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 61-வது பட்டமளிப்பு விழா.!


சேலம், தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லூரியின் 61-வது பட்டமளிப்பு விழா 16.10.2021   (சனிக்கிழமை) அன்று காலை 10.45 மணியளவில், நேரடியாகவும் (face-to-face) காணொளி (virtual) மூலமும் ஸ்ரீ வள்ளியப்பா கலையரங்கில் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில், Mr.Hemanshu Desai, Chief Executive Officer, New India Electricals Ltd., Bengaluru அவர்கள் முதன்மை விருந்தினராக கலந்து கொண்டார். மேலும், திரு.K.சண்முகம், Superintending Engineer, TANGEDCO, Salem மற்றும் முரளிதரன் (Alumnus-Civil, 1985 Batch) Consultant, India Redcrete Pacific Pvt. Ltd., Chennai ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப்   பங்கேற்றனர். 

இவ்விழாவில், 2021-ம் ஆண்டு தேர்ச்சி அடைந்த மாணவர்களுக்கு கொரோனா தடுப்பு பாதுகாப்பு விதிமுறைகளைப் பின்பற்றி  பட்டம் வழங்கப்பட்டது. மாணவ, மாணவியர்கள் தங்கள் பெற்றோர்களுடன் ஆன்லைன் மூலமும் கலந்துகொண்டு பட்டம் பெற்றனர்.

கல்லூரியின் முதல்வர கார்த்திகேயன் அவர்கள் வரவேற்புரை மற்றும் பட்டமளிப்பு விழா அறிக்கையை வாசித்தார். அறிக்கையில், சிறப்பாக கல்வி பயின்ற, முதல் ஐந்து இடங்களை பெற்ற 56 மாணவ, மாணவியர்கள் மற்றும் பட்டம் பெற்ற 756 மாணவ, மாணவியர்களுக்கும்  வாழ்த்துத் தெரிவித்தார். மேலும், கல்லூரியின் தோற்றம் மற்றும் வளர்ச்சி, புதுமையான கற்றல் முறைகள், கல்லூரி பெற்ற சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விருதுகள், மாணவர்களின் சாதனைகள், 100% வேலைவாய்ப்பு, கல்லூரியின் தொலைநோக்குத் திட்டங்கள் மற்றும் கல்வி உதவித்தொகைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். 

கல்லூரியின், தலைவர் வள்ளியப்பா அவர்கள் பட்டமளிப்பு விழாவினை தலைமையேற்று துவக்கி வைத்து வைத்தார். மாணவர்கள் தங்கள் எதிர்கால வாழ்க்கையில் தன்னம்பிக்கையுடனும், விடாமுயற்சியுடனும் மென்மேலும் முன்னேற வேண்டுமென்று வாழ்த்தினார். 

Mr.Hemanshu Desai, CEO, New India Electricals Ltd., Bengaluru அவர்கள் மாணவர்களுக்கு பட்டம் வழங்கி, தொழிற்துறை சார்ந்த அனுபவங்களையும், நவீன தொழில்நுட்பத்தின் முக்கியத்துவத்தையும்  மாணவர்களுக்கு எடுத்துரைத்தார். மேலும், மாணவர்கள் நவீன யுக்திகளை கையாண்டு பல புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்க வேண்டுமென்று ஊக்கப்படுத்தினார்.

சண்முகம், Superintending Engineer, TANGEDCO, Salem மற்றும் .முரளிதரன் (Alumnus-Civil, 1985 Batch) Consultant, India Redcrete Pacific Pvt. Ltd., Chennai ஆகியோர் மாணவர்கள் தங்கள் கல்லூரியில் வளர்த்துக்கொண்ட அறிவையும், திறமைகளையும் தொடந்து புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று அறிவுரைகூறி வாழ்த்தினர்.  

கல்லூரியின் துணைத்தலைவர் திரு.சொக்கு வள்ளியப்பா அவர்கள், வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றைப் பற்றி தெளிவாக எடுத்துரைத்து,  மாணவர்கள் தங்கள் அறிவை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கூறினார்.

கல்லூரியின் துணைத்தலைவர் திரு.தியாகு வள்ளியப்பா அவர்கள், மாணவர்கள் Industry related Projects செய்ய வேண்டும் என்றும், Start-up Activities மூலமாக இளம் தொழில்முனைவோர்களாக முயற்சி செய்ய வேண்டும் என்றும் கூறினார்.

பட்டம் பெற்ற மாணவ, மாணவியர் கல்லூரியின் தலைவர், துணைத்தலைவர்கள், முதல்வர், துறைத்தலைவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தங்கள் நன்றிகளைத் தெரிவித்தனர்.

Previous Post Next Post