2020-21-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்க வேண்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.!


2020-21-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி உடனடியாக வழங்க கோரி விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள கோவில்பட்டி விளாத்திகுளம் பகுதிகளில் சுமார் 1.70 லட்சம் மானாவாரி நிலங்களில் உளுந்து பாசி மக்காச் சோளம் சூரியகாந்தி கொத்துமல்லி வெங்காயம் உள்ளிட்ட பயிர்களை பயிரிட்டு விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர்.


தொடர் மழையின் காரணமாக பயிர்கள் இந்த ஆண்டு பயிர்கள் பாதிக்கப்பட்டு பெரும் சேதத்தை அடைந்துள்ளன.கடந்த காலங்களில் நிவாரணமாக  தமிழக அரசு ஏக்கருக்கு 4,000 ரூபாய் வழங்கியது மேலும் பயிர் காப்பீடு இழப்பீடு தொகை 2020-21-ம் ஆண்டுக்குரிய பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை நவம்பர் மாதம் வரை வழங்கப்பட்டு வந்தத நிலையில் 13 மாதங்கள் ஆகியும் தற்போதைய பயிர் காப்பீடு நிவாரணத் தொகை வழங்கவில்லை.

மேலும் இந்த ஆண்டு தொடர் மழையினால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு மிகவும் கடன் ஆளாகி உள்ளனர் எனவே உடனடியாக அரசு பயிர் காப்பீடு நிவாரணத் தொகையை வழங்க கோரி கரிசல் பூமி விவசாயிகள் சங்கத் தலைவர் வரதராஜன் தலைமையில் நவநீதன், ரங்கசாமி, ஆதிமூலம், ராஜகுரு மற்றும் திரளான விவசாயிகள் கோவில்பட்டி கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தமிழக அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Previous Post Next Post