நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து அதிமுக சார்பில் ஆலோசனை கூட்டம்.!*


நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து கோவில்பட்டியில் அதிமுக நிர்வாகிகளுடன் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர் கடம்பூர் ராஜூ தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி நகர்ப்புற  உள்ளாட்சித் தேர்தல் குறித்து வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் கோவில்பட்டி தனியார் திருமண மண்டபத்தில் வைத்து முன்னாள் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சரும், 

கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் ராஜூ தலைமையில் நடைபெற்றது.இதில் கோவில்பட்டி நகராட்சி உள்பட்ட 36 வார்டு செயலாளர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகளுடன் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து எம்எல்ஏ ஆலோசனை நடத்தினார்.



கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சட்டமன்ற உறுப்பினர்  கடம்பூர் ராஜூ பேசுகையில், தமிழகத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் குறித்து அறிவிப்பு வர உள்ளது. இதில் தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தை பொறுத்தவரை அதிமுக தான் ஆளும் கட்சி என்பதை நிரூபிக்கும் வகையில்


 

கோவில்பட்டி நகராட்சி தேர்தலில் அதிமுகவினர் ஒற்றுமையுடன் பணியாற்ற வேண்டும். அதிமுக தலைமைக் கழகத்திலிருந்து அறிவிப்பு வந்தவுடன் அனைத்து நிர்வாகிகளும் ஒற்றுமையுடன் இருந்து உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும். 

கோவில்பட்டி நகராட்சி புதிய கட்டடம் அதிமுக ஆட்சியில் தான் திறக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் முதலில் அமரும் நகராட்சி தலைவராக அதிமுகவைச் சேர்ந்த வரை இருக்க வேண்டும். இதற்காக அதிமுக நிர்வாகிகள் கோவில்பட்டி நகராட்சிக்கு உட்பட்ட 36 வார்டுகளிலும் தலைமை அறிவிக்கும் நிர்வாகிகளை வெற்றி பெற வைக்க வேண்டும், என்று பேசினார்.

கூட்டத்தில் நகரச் செயலாளர் விஜயபாண்டியன், மாநில பொதுக்குழு உறுப்பினர் ராமச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவர் பழனிச்சாமி, மாநில எம்ஜிஆர் அணி இணைச் செயலாளர் சீனிராஜ், ஒன்றிய செயலாளர்கள் அன்புராஜ், அய்யாதுரை பாண்டியன், மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் அம்பிகா வேலுமணி, அம்மா பேரவை நகர செயலாளர் ஆபிராம் அய்யாத்துரை, 

வழக்கறிஞர் அணி மாவட்ட செயலாளர் சிவபெருமாள், நகர தகவல் தொழில்நுட்ப பிரிவு கவியரசன், வர்த்தக அணி மாவட்ட செயலாளர் ராமர், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட இணைச்செயலாளர் செண்பக மூர்த்தி, மாவட்ட மாணவரணி துணை தலைவர் செல்வக்குமார், மாவட்ட மகளிர் அணி இணைச் செயலாளர் சுதா என்ற சுப்புலட்சுமி, 

முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பாலமுருகன், முன்னாள் கவுன்சிலர்கள் கமலா ரவிச்சந்திரன், ஜெமினி என்ற அருணாச்சலம், பத்மாவதி, ஆரோக்கியராஜ், மகேஷ் பாலா, கழகப் பேச்சாளர் பெருமாள்சாமி, வழக்கறிஞர் பழனி குமார், மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி இணைச் செயலாளர் போடு சாமி, பழனி குமார் உள்ளிட்ட 36 வார்டு செயலாளர்கள், அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

Previous Post Next Post