கோவிட் தடுப்பூசி போட்டதால் கர்ப்பிணிக்கு கருச்சிதைவா ? - கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் விளக்கம்.


டிவிட்டர் வளைதள பக்கத்தில் சேர்மன் பாண்டியன் என்பவரால் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சுகாதாரப்பகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வட்டம் எஸ்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கோவிட் தடுப்பூசி போட்டதன் விளைவாக ஒரு கர்ப்பிணிக்கு கருச்சிதைவு ஏற்பட்டதாக பதிவிட்டுள்ளார். இதுகுறித்து கோவில்பட்டி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அவர்களின் அறிவுரையின்படி மருத்துவக்குழுவினரால் ஆய்வு மேற்கொண்டு அதன் முதல் தகவல் அறிக்கை பின் வருமாறு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது....

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சுகாதாரப்பகுதிக்குட்பட்ட ஓட்டப்பிடாரம் வட்டம், எஎப்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம், மணியாச்சி துணை சுகாதார நிலையத்திற்குட்பட்ட சொக்கநாதபுரத்தைச்சார்ந்த திருமதி. (23வயது), என்ற கர்ப்பிணித்தாய் தனது கர்ப்பத்தை 24.11.2021 அன்று சம்பந்தப்பட்ட கிராம சுகாதார செவிலியரிடம் பதிவு செய்துள்ளார். அவருக்கு இதுவே முதல் கர்ப்பமாகும். கிராம சுகாதார செவிலியரின் அறிவுரைப்படி 05.01.2022 அன்று எஸ்.கைலாசபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பகால பரிசோதனை செய்தவற்காக வந்துள்ளார். வுழக்கமான கர்ப்பகால பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு மூன்றாவது மாத ஸ்கேன் செய்யுமாறு மருத்துவ அலுவலர் அவர்கள் பரிந்துரை செய்துள்ளார். அதே தேதியில் மணியாச்சி துணை சுகாதார நிலையத்தில் கோவிட் 2-ம் தவணை தடுப்பூசியும் எடுத்துக்கொண்டார்.

மருத்துவ அலுவலரின் பரிந்துரையின்பேரில் 08.01.2022 அன்று எம்கேன் செய்தார். 11.01.2022 அன்று கிராம சுகாதார செவிலியரின் அறிவுரைப்படி ஸ்கேன் அறிக்கையுடன் எஸ்.கைலாசபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு மருத்துவ அலுவலரின் அறிவுரை பெற வந்துள்ளார். கர்ப்ப வாரங்கள் - 13 வாரங்கள் நிறைவடைந்தும், எஸ்கேன் அறிக்கையின்படி (Crown Rump Length (CRL) (உச்சி - பாத நீளம் -7 வாரங்கள்)) 5 வாரங்கள் குன்றிய கருவளர்ச்சி மட்டுமே காணப்பட்டது. மேலும் கருவின் இதய துடிப்பு மற்றும் அசைவு காணப்படவில்லை.

குன்றிய கருவளர்ச்சி, கருவின் இதய துடிப்பு மற்றும் அசைவில்லாத காரணத்தினால் கர்ப்பிணித்தாய், தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் மேல் சிகிச்சைக்காக மருத்துவ அலுவலரின் பரிந்துரையின் பேரில் அனுப்பி வைக்கப்பட்டார்.

தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமணையில் 13.01.2022 அன்று மேற்கூரிய மருத்துவ காரணங்களுக்காக கருக்கலைப்பு செய்யப்பட்டது. எனவே மருத்துவ காரணங்களுக்காக மட்டுமே கருக்கலைப்பு செய்யப்பட்டதே தவிர கோவிட் தடுப்பூசியினாலோ அல்லது தடுப்பூசி சம்பந்தப்பட்ட விளைவுகளினாலோ இந்த கருச்சிதைவு நிகழவில்லை என முதல் தகவல் அறிக்கையின் மூலம் தெள்ளத்தெளிவாக அறியப்படுகிறது. மேலும் மருத்துவக்குழுவினர் மூலம் தீவிரமாக கண்காணித்து வருகிறோம் என்பதனை தெரிவித்துக்கொள்கிறேன், என தெரிவித்துள்ளார்.

Ahamed

Senior Journalist

Previous Post Next Post