புஞ்சை புளியம்பட்டி பகுதியில் போலீசார் தீவிர ரோந்து,ஆன்லைன் லாட்டரி, கஞ்சா,மது விற்பனை செய்தவர்கள் கைது.!*


ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்.சசிமோகன் IPS  உத்தரவுப்படி,  சத்தியமங்கலம் உட்கோட்ட துணைக்காவல் கண்காணிப்பாளர் ஜெயபாலன வழிகாட்டுதலின் பேரில்,புளியம்பட்டி காவல் ஆய்வாளர் வேலுச்சாமி  தலைமையிலான தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தியதில், புளியம்பட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட புங்கம்பள்ளி, குரும்பபாளையம், சொலவனூர், பனையம்பள்ளி, கணக்கரசம்பாளையம் மற்றும் புளியம்பட்டி நகரப்பகுதிகளில் சோதனை நடத்தியதில்

மது விற்பனை செய்த துரைசாமி-70  மாதா பாளையம், புங்கம்பள்ளி என்பவரிடமிருந்து 7 குவாட்டர் பாட்டில்களும், காளியம்மாள்-80 குரும்பபாளையம் வீரமாத்தி கோவில் அருகில், பனையம்பள்ளி யைச் சார்ந்த வரிடமிருந்து180 மிலி குவாட்டர் பாட்டில் களுடனும், கஞ்சா விற்பனை செய்த செல்வராஜ் (எ) செல்வன்- 49  சொலவனூர், பனையம்பள்ளி, புளியம்பட்டி என்பவரிடமிருந்து கஞ்சா சுமார் -30 கிராம்,

ஆகிய மூன்று நபர்களையும் காவல் ஆய்வாளர் திரு.வேலுசாமி அவர்கள் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்து  செல்வராஜை  நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். மது விற்பனை செய்த இரண்டு பேரையும், வழக்கு பதிவு செய்து நிலைய ஜாமீனில் அனுப்பட்டனர்.

மேலும் ஆன் லைன் லாட்டரி வாட்ஸ்அப் மற்றும் வெள்ளை காகிதத்தில் எழுதி விற்பனை செய்த பாரதி வீதி, புளியம்பட்டியை சார்ந்த, அம்பிகா- வயது 40 மற்றும் புளியம்பட்டி அண்ணா நகரைச் சார்ந்த சசிகுமார்- வயது 33,  ஹக்கீம்- வயது 33,மாதவி வீதி, புளியம்பட்டி ஆகியோரை கைது செய்து, வழக்கு பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டனர்.

Previous Post Next Post