பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடை நீக்கம் - இந்தோனேசியா அறிவிப்பு.!

பாமாயில் ஏற்றுமதிக்கு விதித்த தடையை திங்கட்கிழமை முதல் நீக்குவதாக இந்தோனேசிய அரசு அறிவித்துள்ளது. 

உள்நாட்டில் பாமாயில் விலை 50 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்ததையடுத்து ஏற்றுமதிக்கு இந்தோனேசிய அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில் உள்நாட்டு சமையல் எண்ணெய் விநியோக நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, இந்தோனேசியா தனது பாமாயில் ஏற்றுமதி தடையை திங்கள்கிழமை முதல் நீக்கும் என்று ஜனாதிபதி ஜோகோ விடோடோ வியாழக்கிழமை (இன்று) தெரிவித்தார்.

பாமாயில் தொழிலில் ஈடுபட்டுள்ள 17 மில்லியன் தொழிலாளர்களின் நலனை அரசாங்கம் கருத்தில் கொண்டு, மொத்த சமையல் எண்ணெய் லிட்டருக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட 14,000 இந்தோனேசிய ருபய்யாவுக்கு (இந்திய மதிப்பில் சுமார் 70 ரூபாய்) இன்னும் குறையவில்லை என்ற போதிலும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று ஜனாதிபதி வீடியோ அறிக்கையில் தெரிவித்தார்.


Ahamed

Senior Journalist

Previous Post Next Post