தமிழக மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை - ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி சண்முகநாதன்.!


தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்திய திமுக அரசை கண்டித்தும், மின் கட்டண உயர்வை உடனடியாக திரும்ப பெற வலியுறுத்தியும் தூத்துக்குடி வி.வி.டி சிக்னல் அருகில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட  செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதன்  தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் மின்கட்டண உயர்வால் எழை, எளிய மக்களை வாட்டிவதைக்கும் திமுக அரசை கண்டித்து பதாகைகளை ஏந்தியவாறு பல்வேறு கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து  ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சண்முகநாதன் 

தேர்தல் வாக்குறுதியில் அறிவித்த எந்த ஒரு திட்டத்தையும் செயல்படுத்தாமல் அதற்கு மாறாக மின்சார கட்டண உயர்வு சொத்து வரி , போக்குவரத்து கட்டண உயர்வு என அனைத்தையும் உயர்த்தி மக்களை  வாட்டி வதைத்து வருகிறது திமுக அரசு, 

இன்று தமிழகம் முழுவதும் பள்ளி மாணவ மாணவிக்கு காலை சிற்றுண்டி திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்து வருகிறார் இந்த திட்டத்தை அறிவித்தவர்  எடப்பாடியார் இப்படி அதிமுக அரசு கொண்டுவந்த பல நல்ல திட்டங்களை இன்று ஸ்டிக்கர் ஒட்டி ஆட்சி செய்து வருகிறது திமுக அரசு தமிழக மக்களுக்கான எந்த ஒரு நல்ல திட்டங்களையும் திமுக அரசு கொண்டு வரவில்லை என குற்றம் சாட்டினார்.

ஆர்ப்பாட்டத்தில் கழக அமைப்புச் செயலாளர் சின்னத்துரை, மாவட்ட அவைத் தலைவர் திருப்பாற்கடல், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் சுதாகர், முன்னாள் நகர் மன்ற தலைவர் ஹென்றி தாமஸ் முன்னாள் மேயர் அந்தோணி  கிரேஸ் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Previous Post Next Post