இபிஎஸ் 95 பென்ஷனர்கள் கோரிக்கையை வலியுறுத்தி தலை நகர் டெல்லியில் மாபெரும் ஆர்ப்பாட்டம். - ஆயிரக்கணக்கான பென்சர்கள் பங்கேற்பு.!

 

புதுடெல்லி- டிச.8.

இபிஎஸ் பென்சர்தாரர்களுக்கு, குறைந்தபட்சம் மாதம் ரூபாய் 9000 பென்ஷன் வழங்கிட கேட்டும், இ.பி.எப் 95 பென்சர்தாரர்களுக்கு,

ஈ.எஸ்.ஐ. மருத்துவ வசதி அளிக்க கேட்டும், மூத்த குடி மக்களுக்கு நிறுத்தப்பட்ட ரயில் கட்டணச் சலு கையை வழங்கிட வலியுறுத்தியும்,

1-9-2014 க்கு முன், பின் என பென்சர்களை பிரித்து வஞ்சிக் காதே, தகுதியுள்ள உயர் சம்பளம் பெற்ற அனைவருக்கும், உயர் பென்சன் வழங்கிட கேட்டும்,

கேரளம், புதுச்சேரி மாநில அரசுகள் வழங்குவது போல, தமிழக அரசும், இபிஎப் 95 பென்சருக்கு மாதம் ரூபாய் 2000 சமூக பாது காப்பு பென்சன்வழங்கிட கேட்டும், புதுடெல்லி ராம் லீலா மைதானத் தில், ஆயிரக்கணக்கானோர் பங் கேற்ற ஆர்ப்பாட் டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு இபிஎப்95 பென்சனர் சங்க அகில இந்திய தலைவர் எம்.என். ரெட்டி, அகில இந்திய செயலாளர் தர்மாஜன், அகில இந்திய துணைத் தலைவர்கள் கே.பி.பாபு, அதுல் பிகே, சங்க பொருளாளர் பேயண ன் ஆகியோர் தலைமை தாங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் , தமிழக இ.பி.எப்.95. பென்ஷன் மாநில தலைவர் ஆர்.கிருஷ் ணமூர்த்தி,  மாநில செயலாளர்  கே .பி .பாபு , மாநில துணை செயலாளர் உமா காந்தன் மாநில துணைத் தலைவர் ராமய்யன், தமிழக பீடி சங்க பென்ஷனர் தலைவர் வேலு, கோவை மாவட்ட இபிஎப் 95 பென் ஷன்தாரர்கள் நலச்சங்கத் தலை வர் கே. புஷ்பராஜன்,உதவி தலைவர் நாகராஜன், செயலாளர் குமாரசாமி, சங்கமாநிலக்குழு உறுப்பினர்  ஏ.ஆர். துரைசாமி, மற்றும் தமிழக ஆவின் ஓய்வூதிய சங்க சுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.


செய்தி மற்றும் புகைப்படம் டெல்லியிலிருந்து :நாராயணசாமி - சிறப்பு நிருபர் 



Ahamed

Senior Journalist

Previous Post Next Post