போக்குவரத்துக்கு லாயக்கற்ற சாலை

திட்டக்குடி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள விநாயகாந்தல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆவட்டி - விநாயகாந்தல்  சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, வேன் உட்பட நூற்றுக்கணக்கான வாகனங்கள் தினசரி செல்கின்றன. இவ்வழியாக கல்லூர் கழுதூர் ,பாசார், அரியநாச்சி, கச்சி மைலூர் உள்ளிட்ட கிராம மக்கள் அத்தியாவசிய தேவைக்கு திட்டக்குடி ,விருத்தாசலம், பெரம்பலூர் பகுதிகளுக்கு செல்கின்றனர். இந்தச் சாலை பராமரிப்பின்றி குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ளதால் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள், மாணவ ,மாணவிகள் ,கிராம மக்கள் கடும் அவதியடைகின்றனர். எனவே குண்டும் குழியுமாக போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் உள்ள விநாயகாந்தல் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.