அந்தியூர் அருகே இருடியம் தருவதாக கூறி 10 ல்டசம் பணம் வாங்கி கொண்டு ஏமாற்றிய ஆறு பேரை கைது செய்த போலீசார்

அந்தியூர் அருகே இருடியம் தருவதாக கூறி 10 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றிய 7 பேரில் ஆறு பேர் கைது ஒருவர் தலைமறைவு.

 


 

அந்தியூர் அருகே இருடியம் தருவதாக கூறி, 10 லட்சம் வாங்கி கொண்டு ஏமாற்றிய 7 பேரில், ஆறு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூர் மாவட்டம், ராமகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர்,  ராமலிங்கம், 54. இவர் இதே பகுதியில், விவசாயம் மற்றும் நிலம், வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இந்நிலையில், அதே பகுதியை சேர்ந்த, சதீஷ்குமார் என்பவருக்கும், நிலம் வாங்கி, விற்பது சம்பந்தமாக இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விவசாயம் மற்றும் நிலம் வாங்கி விற்றால், பணம் சம்பாதிக்க முடியாது. அதற்கு பதிலாக, இருடியம் உள்ளது. அதனை வாங்கி வீட்டில் வைத்தால் போதும். நமக்கு வேண்டிய அளவிற்கு பணம் வந்து சேரும்.  என்று ஆசைவார்த்தை கூறி,  அதற்கு 10 லட்சம் ரூபாய் பணம் வேண்டும். அந்த பணத்தை கொடுத்தால், இருடியம் கிடைக்கும் என்று சதீஷ்குமார் கூறியுள்ளார்.  அதனை அடுத்து 10 லட்ச ரூபாய் பணத்துடன், ராமலிங்கம் கடந்த 5 ல், ஈரோடு மாவட்டம், அந்தியூர் பஸ் நிலையம் வந்துள்ளார். பின்பு பேசிய தொகையை சதீஷ்குமார் மற்றும் அவருடைய நண்பர் இடத்தில் கொடுத்துள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட அந்த நபர்கள், மேலும் பணம் கொடுத்தால்தான் அந்த இருடியத்தை கொடுக்க முடியும். இல்லையொன்றால் உன்னை கொன்று விடுவோம். என மிரட்டியுள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த ராமலிங்கம், இது குறித்து அந்தியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த, போலீசார், அந்தியூர் இன்ஸ்பெக்டர் ரவி, தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு, தேடி வந்த நிலையில், நேற்று காலை, அந்தியூர் வனக்கோவிலில் இவர்கள் ஆறு பேரும் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த, தனிப்படை போலீசார் அவர்கள் ஆறு பேரையும் கைது செய்து, அந்தியூர் காவல்நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்தனர். இதில் இருடியம் கொடுப்பதாக கூறிய சதீஷ்குமார் என்பவர் தலமறைவாகியுள்ளார். மீதியுள்ள நாமக்கல் மாவட்டம், திருசங்கோடு, நெசவாளர் காலனி பகுதியை சேர்ந்த, செந்தில்ராஜா, 45.  திருச்சி மாவட்டம், சிறுகமணி பகுதியை சேர்ந்த,சேட்டு,36. கரூர் மாவட்டம், காந்திகிராமம்,  பகுதியை சேர்ந்த, காசிநாதன்துரை,49.  ஈரோடு மாவட்டம், பெரிய அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த, சுரேஷ், 38. மற்றும் ஈரோடு மாவட்டம், இடையன்காட்டு வலசு பகுதியை சேர்ந்த, மதன்பெர்னாண்டஸ், 34. திருச்செங்கோடு நொசவாளர் காலனி பகுதியை சேர்ந்த பிரசாந்த், 23. உள்ளிட்ட ஆறு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 10 லட்சம் பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் அவர்கள் பவானி ஜே.எம்.,  கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.