மக்கள் நீதி மய்யம் சார்பில் ரூ.25 ஆயிரம் மதிப்பிலான உணவு, மளிகை பொருட்கள்: மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம்.சிவக்குமார் வழங்கினார்

 ஈரோடு வடகிழக்கு மாவட்ட மக்கள் நீதி மய்யம் சார்பில் கோபிசெட்டிபாளையம் சட்டமன்ற தொகுதி சார்பில் புதுக்காடு பகுதியில் உள்ள வயதான ஏழை  எளியோர் குடும்பங்களுக்கு மாவட்ட செயலாளர் ஜி.எல்.எம் சிவக்குமார் தலைமையில் முககவசம் உள்பட  ரூபாய் 25,000 மதிப்பிலான அரிசி, பருப்பு, சேமியா, சர்க்கரை, எண்ணெய், வரமிளகாய், புளி, உப்பு, சோப்பு போன்ற மளிகை பொருட்களை பிளாஸ்டிக் ஒழிப்பை வலியுறுத்தும் வாசகம் அடங்கிய துணிப்பைகளில் 50 பேருக்கு வழங்கினார்.


இந்நிகழ்வில் கோபி நகர செயலாளர் ஜி சி சிவக்குமார் கோபி ஒன்றிய செயலாளர் என் கே பிரகாஷ் மாவட்ட மகளிர் அணி சுதா செல்வராஜ் சமூக ஊடகம் மற்றும் தகவல் தொழில் நுட்ப பிரிவு நா முத்துக்குமார் கோபி ஒன்றிய மாணவரணி ரஞ்சித்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்