1500 நபர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட சமையல் பொருட்கள்: முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்

அவினாசி தெற்கு ஒன்றியம் பழங்கரை ஊராட்சிக்குட்பட்ட ஆயிக்கவுண்டம்பாளையம், அவிநாசிலிங்கம்பாளைதம், நல்லிக்கவுண்டம்பாளையத்தில் பொதுமக்கள் 1500 நபர்களுக்கு அரிசி, மளிகை உள்ளிட்ட சமையல் பொருட்களை திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எம்.எஸ்.எம்.ஆனந்தன் வழங்கினார்.உடன் மாவட்ட பேரவை இணை செயலாளர் அவினாசி ஒன்றிய சேர்மன் ஜெகதீசன், அவினாசி தெற்கு ஒன்றிய செயலாளர் மு.சுப்ரமணியம், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ஆனந்தகுமார், பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தனபால், இளைஞரணி செயலாளர் ஜெயபால் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.இதற்க்கான ஏற்பாடுகளை பழங்கரை தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் தனபால் செய்திருந்தார்.