கோடங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு அத்தியாவசிய பொருட்கள், கபசுர குடிநீர்

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த கோடங்குடி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு  அத்தியாவசிய பொருட்கள்மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

தமிழ் அஞ்சல் - TAMIL ANJAL

 

நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்றதலைவர் மகாலெட்சுமி வேலாயுதம் தலைமை  தாங்கினார்.

ஒன்றிய கவுன்சிலர் அகிலா அருள் , துணைதலைவர் சங்கர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக மங்களூர் ஒன்றிய முன்னால் பெருந்தலைவரும் அதிமுக ஒன்றிய செயலாளருமான கே.பி கந்தசாமி,வட்டார வளர்ச்சி அலுவலர் சங்கர், உதவி ஆய்வாளர் அசோகன் ஆகியோர்  கலந்து கொண்டு துப்புரவு பணியாளர்களுக்கு முககவசம், கையுறை, சானிடைசரி ,அரிசி, காய்கறிகள், உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார்கள்.

 

 பின்னர் சமூக விலகல் மற்றும் முககவசம் அனிவதன் அவசியம் குறித்து மக்களுக்கு  விளக்கம் அளித்து கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் ஊராட்சி செயலர் பழனியப்பன், கிராம உதவியாளர் கார்த்திக், வார்டு உறுப்பினர்கள் ரேவதி, பேரின்பம்,மனிமொழி,உழா,குழந்தைவேல் ஆகியோர்

கலந்து கொண்டனர்.